அன்புள்ள ஜெ
நகுலனை அடையாளம்
கண்டுகொள்ளும் அந்தக்குதிரைக்குட்டி மிகமிக அழகாக உள்ளது. அதன் துள்ளலும் அதன் அக்காவின்
கண்டிப்பும் கூடவே அக்காவிடம் இருக்கும் குழந்தைத்தனமும் கண்முன் அவற்றைப்பார்ப்பதுபோலவே
உள்ளது. அழகான ஓர் உலகம் அது. நகுலனை அந்த சூதருலகம் எதிர்கொள்ளும் விதமும் நுட்பமாக
உள்ளது. அவனை முதலில் குதிரைகள் ஏற்றுக்கொள்கின்றன. அதன்பின்னரே சூதர்கள் அவனை விரும்புகிறார்கள்.
ராமச்சந்திரன்