ஜெ,
நளதமயந்தி கதையின்
அறிந்த கட்டமைப்புக்குள் அன்றைய மத்திய இந்திய அரசியல்சூழலை முன்வைத்து நுட்பமாகப்பின்னிச்செல்கிறீர்கள்.
ஏற்கனவே பால்ஹிகக் கூட்டமைப்பு பற்றிய அரசியலால் வடமேற்கையும் துவாரகை அரசியலால் தென்மேற்கையும்
வங்க அரசியலால் கிழக்கையும் விரிவாகச் சொல்லிவிட்டீர்கள். கிட்டத்தட்ட பாரதத்தின் அன்றைய
ஒட்டுமொத்த அரசியல்சூழலுமே வெளிவந்துவிட்டது. போர் நிகழ்வதற்கு முன் விரிந்து பரவி
நிற்கும் இந்த மாபெரும் சித்திரம் பிரமிப்பூட்டுகிறது
தேவ்