அன்புள்ள ஜெ,
நளதமயந்தி கதையில்
அன்னம் விடு தூது மிக அழகிய பகுதி. அதை எப்படிச் சொல்லப்போகிறீர்கள் என எண்ணியிருந்தேன்.
அழகான உவமையாக மட்டும் அதை நிறுத்திவிட்டு கவிதைவழியாக கடந்து சென்றீர்கள்.
அன்னம் நளனுக்கு
தமயந்தியின் உள்ளத்தில் உள்ள மென்மை. தமயந்தியின் பார்வையில் நளனிடம் இருக்கும் நெகிழும்தன்மை.
இருவரும் அன்னத்தைக்கொண்டே ஒருவரை ஒருவர் அறிகிறார்கள். தேவயானிக்கு புலி. தமயந்திக்கு
அன்னம். தேவயானி கொற்றவை. தமயந்தி கலைமகள்.
அன்னத்திற்கு தன்
கண்ணீரை உண்ணக்கொடுத்து நளன் அனுப்பி வைப்பது மிக அழகான இடம்
செல்வக்குமார்