அன்னத்தின் மூலம் பிரம்மத்தை அறிந்தவன் பீமன். தான் அறிந்த மற்போரையும் சுவையுடன் இணைத்துக் கொண்ட விதம் அபாரம். “ஆம், அடுநெறியில் ஒரு சொல் உண்டு. ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது” – என்கிறான் பீமன். பலராமர், துரியன், பீமன், கர்ணன், பால்ஹிகர், பீஷ்மர், பலாஹஸ்வர் என அனைவருமே ஆற்றலானவர்கள், நிறைவடையவும் கூடும். கிருஷ்ணன் அறிவானவன், வேத அந்தம் அறிந்தவன், மேன்மையடைகிறான். ஆனால் நேமிநாதர் கருணையானவர், எனவே முழுமையடைகிறார்!!!
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Sunday, June 25, 2017
நீர்க்கோலம் – அன்னப்பிரம்மம்