பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
இந்த 'நீர்க்கோலத்திலும்' மிளிரும் வைர வரிகள் எனக்கும் புலப்பட தொடங்கிவிட்டன!
சகதேவனின் மொழியில் மானிடத்தின் அவலத்தை “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்பதாகட்டும்,
“அனைத்துமறிந்தவன் ஏதுமறியாதவனின் சிரிப்பை அடையும் மாயமே ஞானமெனப்படுகிறது” என்பதாகட்டு ம் 'களை கட்டுகிறது'!!.
அன்புடன்,
அ .சேஷகிரி