Wednesday, June 21, 2017

கவிடி

 
 
ஜெ,
இன்றைய வெண்முரசில் உள்ள "கவிடி" என்ற சொல்லின் பொருள் என்ன?

    "“பின்னர்தான் நிமித்திகர்களை அழைத்து வந்து கவிடி பரப்பி களம்
       நிரத்தி காய் விரித்து நிமித்தம் நோக்க வைத்தனர்."

கவிடி என்றால் மணலா? ​நான் வழக்கமாக பயன்படுத்தும் அகராதிகளில் இச்சொல் இல்லை. ​Google-லிலும் பொருள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பாடல் மட்டும் கிடைத்தது.

   அடியர்கட் கிடுமை யாடு மாங்கனுக் கவிடி கூடும்
   திடமதித் தேவ யாற்றுக் கெமுனைமா லமுத முந்நீர்க்
   கடர்நிழற் சோலை வேலை மலர்மகள் குழலின் கற்றை
   நெடுமறைக் கிடுந ரந்தம் பாதிதுன் னீல நேர்த்தி.
       
      - http://thiruppul.blogspot.in/2009/07/19.html

​இதன் பொருளும் கிடைக்கவில்லை.

​நன்றி​​
 
டி கார்த்திகேயன்
 
 
அன்புள்ள கார்த்திகேயன்
 
கவிடி என்றால்  சோதிடம் பார்க்க பயன்படுத்தப்படும் சோழி, கூழாங்கல், விதைகள் போன்ற பொருட்கள். பழைமையான சொல். நாட்டார்ச்சொல் என நினைக்கிறேன். பழந்தமிழில் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரிகிறது

ஜெ