//தமயந்தி ஓய்வுக்குப்பின் நீராடி நீண்ட குழலை தோள்களில் விரித்திட்டு வெண்ணிற பட்டாடையை போர்த்திக்கொண்டிருந்தாள். நெற்றியிலும் வகிடிலும் குங்குமம் அணிந்திருந்தாள். அமைச்சர்கள் அவளை அக்கோலத்தில் கண்டதும் சொல்மறந்தனர்.//.
இதற்கு பொருத்தமாக ஷண்முகவேலின் சித்திரம் ஒன்றை மனம் தானாகவே கற்பனை செய்து கொண்டது. அவர் வரைந்திருந்தால் இந்த காட்சியைத்தான் வரைந்திருப்பார் என நானாக நினைத்துக்கொள்கிறேன்.
மேலும் இது போலவே அனைவரையும் சொல் மறந்து திகைக்க வைக்கும் தோற்றத்தில் தேவயானியும் பாஞ்சாலியும் பல சமயங்கலில் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் ஒரே பெண்ணே வேறு வேறு பெயர்களில் காலங்களில் பிறக்கிறார்கள்.அதே நிமிர்வு அதே பேரழகு அதே உயரம் அதே கணக்குகள் அரசியலாடல்கள், கைக்கொள்ளுதல்கல்,கடந்து செல்லுதல் என.
லோகமாதேவி