Tuesday, July 10, 2018

ஏற்பு



எவராயினும் எண்ணி ஏற்றுக்கொண்ட எதையும் என்றேனும் ஐயப்படுவார்கள். முழுவாழ்க்கையையும் அளிப்பதற்கு எண்ணாது ஏற்றுக்கொண்ட ஒன்றே உகந்தது - என்று திருதராஷ்டிரரின் அறையை விட்டு வெளியே செல்லும்போது யுயுத்ஸுவூம் குண்டாசியும் பேசிக்கொள்கிறார்கள். இதைப்போன்ற ஒரு வரியை மறைந்த என் தந்தை சொன்னதை ஞாபகம் வருகிறது. என் தம்பி ஒருத்தன் தீவிர கம்யூனிச இயக்கத்தில் தீவிரமாக இருந்தான். அவன் திரும்பி வருவான் என்று தந்தை சொன்னார். நாலுபக்கம் பாக்கிற மனசு அஞ்சாம்பக்கமும் பாக்கும்டா. ஒருநாள் வந்திருவான் என்றார். ஏழு வருடங்களுக்குப்பின்னால் அவர் திரும்பிவந்தார். அதைத்தான் ஞாபகப்படுத்திக்கொண்டேன்

சுவாமிநாதன்