ஜெ
குண்டாசி திருதராஷ்டிரர், துரியோதனன், விதுரர், யுயுத்ஸு
என எல்லாரையுமே கீறிப்பிளந்து பார்ப்பதைக் கண்டபோது எனக்கு பயமாக இருந்தது. அவரிடம்
தீர்க்கர் சொல்கிறார். கடவுளே மனித உடம்பை தோல்போட்டு மூடித்தான் வைத்திருக்கிறார்.
அந்தரங்கம் வெளியே தெரியவேண்டாம் என்று. மிகுந்த முதிர்ச்சியுடன் யுயுத்ஸு சொல்கிறார்.
எத்தருணத்தையும்இவ்வாறு எல்லாத்திசைக்கும் இழுக்க முடியும், மூத்தவரே” என்று அமைதி மாறாத குரலில் சொன்னான். “எத்திசைக்குஇழுத்தாலும் அங்கு ஓர் உண்மையும் நின்றிருக்கும்.அதுவே
என் கருத்தும். உண்மையில் அவர் சொல்வதுக்கு முன்னரே நானே அதை நினைத்திருந்தேன். அந்த
இரக்கமற்ற ஆபரேஷன் கத்தியை ஒருவன் தன் கழுத்துக்கு நேராக திருப்பிக்கொண்டால் என்ன ஆகும்
என்பதற்கு குண்டாசியின் முடிவே சிறந்த உதாரணம்
மகாதேவன்