ஜெ
பாரதவர்ஷத்தின் மல்லர்கள் அனைவருமே பீமனிடம்
பெரும் மோகம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே பீமனைப்பற்றிய செய்திகளைக் கேட்டு வளர்கிறார்கள்.
பீமனின் மைந்தர்கள் சர்வதனும் சுருதசோமனும் பீமனைப்போலவே இருக்கிறார்கள் என்றால் இப்போது
சங்கனும் பீமனைப்போலவே இருக்கிறான். பீமன் வெவ்வேறு வடிவில் மீண்டும் மீண்டும் முளைத்து
வந்துகொண்டே இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்பட்டது. சங்கனின் பொறுப்பில்லாத தன்மை, அவசரம்,
பெரும் பக்தி, முரட்டுத்தனம் எல்லாமே கலந்த குழந்தைத்தனம் அழகான சித்திரமாக உள்ளது
ஆனந்த்