ஜெ
சகுனி சொல்லும் இந்த வரி மிக முக்கியமானது
எளிய எண்ணமென என்னுள் இருந்தது பெருகி பேருருக்கொண்டு இத்தனை பெரிதாக திசைமறைக்க சூழ்ந்திருப்பதை காண்கையில் என்னுள் இருப்பவை அனைத்தையும் நான் அஞ்சுகிறேன்
ஓர் உள்ளத்திற்குள் எவருமறியாதிருக்கையில் எண்ணம் எத்தனை சிறிதாக இருக்கிறது! சின்னஞ்சிறு புழுபோல. அது புவி தாங்கும் ஆயிரம்தலை சேடனென்று மாறும் வாய்ப்பு கொண்டது. எண்ணங்களை தாங்களே வளரும்படி ஒருபோதும் விடக்கூடாது
இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் வாழும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் அவ்வாறு பேருருக்கொள்ளும் வாய்ப்புள்ளவை. கோடானுகோடி சேடர்கள் எழுந்தால் புவி தாங்கும் சேடன் தலைதாழ்த்திவிடக்கூடும்
சகுனிதான் ஒரு சிறு எண்ணமாக இந்தப்போரை முதலில் அடைந்தவர்.
அறுபதாண்டுகள் காத்துக்காத்துப் போரை நிகழ்த்துபவர். ஆனால் அவருக்குள் வெறும் எண்ணமாக
இருந்தது வெளியே புரஜக்ஷன் ஆக தெரியும்போது அவர் துணுக்குகிறார். இதை நான் நினைக்கவே
இல்லை என்று பயப்படுகிறார்.
சகுனி போர் ஆரம்பித்ததுமே சாந்தமாகிவிட்டார் என்று
வெண்முரசு சொல்லிக்கொண்டே இருந்தது. அவருக்கு போரில் பயம் இருக்க நியாயமில்லை. அப்படியென்றால்
அவர் எதை பயப்படுகிறார்? இதைத்தான் என்று இப்போது தெளிவடைந்தேன்
ராமச்சந்திரன்