Tuesday, July 10, 2018

குண்டாசியும் யுயுத்ஸுவும்

ஜெ

மேலோட்டமான பார்வையில் குண்டாசி தந்தையை சந்தேகப்படுகிறான், யுயுத்ஸு விரும்புகிறான் என்று தோன்றுகிறது. அது உண்மை அல்ல. குண்டாசி தந்தையைப்புண்படுத்துகிறான். ஆனால் அவனுக்குத் தந்தையின் மனம் தெரியும். அவர்மேல் அன்பு கொண்டிருக்கிறான். ஆகவேதான் அவன் அஸ்தினபுரியை விட்டுச் செல்வதில்லை. ஆனால்  யுயுத்ஸு தந்தையைபற்றிச் சொல்லும் வரிகள் மிகவும் எதிர்மறையானவை தந்தை இருமுனைகளிலாக ஓய்விலாது ஆடிக்கொண்டிருப்பவர். அறத்தில் அமைந்தது அவர் உள்ளம். மைந்தர் மேல் கொண்ட பற்றில் அமைந்தது அவரது ஆழம். நான் இத்தாலத்துடன் சென்று அவரை பார்க்கையில் எந்த முனையில் அவர் இருப்பார் என்று என்னால் சொல்லவியலாது. தாங்கள் என்னுடன் வந்தால் அறத்தின் முனையில் அவர் வந்து நின்றிருப்பார் என்று எண்ணினேன்குண்டாசி யைப்போல யுயுத்ஸு தந்தையை நம்பவில்லை. திட்டமிட்டு குண்டாசியைக் கூட்டிச்செல்கிறான். இதைப்போல பெரியவரை அவமதிக்கும் வேறு செயலே கிடையாது.ஆகவேதான் அவன் குண்டாசியையும் அனைவரையும் விட்டுவிட்டுச் செல்கிறான் 

மகாதேவன்