Sunday, July 15, 2018

கௌரவர்களின் மனசாட்சி



அன்புள்ள ஜெ

         யுயுத்துஸு மற்றும் குண்டாசி  வழியாக போருக்கு முந்தைய தருணங்கள் உருப்பெறுகின்றன. விடைகொள்ளல்கள் பிரிவுகள் உளமாற்றங்கள் என அவை எழுந்துவருகின்றன.

  எந்தையும் என் மூத்தோரும் வேழங்கள் அதனாலேயே மிகவும் இரக்கதிற்குரியவர்கள் எச்சூழ்நிலையிலும் அவர்கள் வேழங்களாகவே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என குண்டாசி உரைத்தபோது போரறத்தோர் என்றும் அதே சமயம் சிறுமைகள் நிறைந்தவர்களாகவும் இடத்திற்கேற்ப பாவனைகள் சூடிக்கொள்ளகின்றனா துரியன் இவ்விரண்டையும் சமன்செய்து நிகர்நின்றுவிட்டான இல்லை அதுவும் ஒரு பாவனைதானா என்ற கேள்வி எழுந்தது.

பூரிசிரவஸுக்கு எந்த பயனும் இல்லாமல் மலைகளில் சாலை அமைக்க சிற்பியையும் ஒருக்கி அதற்கான பொன்னையும் அளிக்கும் அதே துரியன் ஐந்து இல்லங்கள் கூட பாண்டவர்க்கு கிடையாது என்று உரைக்கிறான். யாதவரே தங்களுக்கென்றால் கேளுங்கள் இம்மணிமுடியை இக்கனமே துறக்கிறேன் என வேள்விநாளில் அவையில் சொல்லுரைக்கிறான்.
அலையென தொடர்ந்து உருமாற்றம் பெற்றுக்கொண்டே உள்ளான் துரியன்.

கௌரவர்களின் மனசாட்சியாக இருந்து அதனலேயே தன்னை அழித்துக்கொண்ட குண்டாசியிடம் இறுதியில் உன்மூலமாக என்னுள் இன்னும் அறமென ஒரு குரல் என்றும் ஒலித்துக்கொண்டுள்ளது அது நன்று என துரியன் உரைப்பதும் குண்டாசி தன்னை வருத்திகொண்ட காரணத்தை அவன் கொண்ட பாவனைகளனைத்தும் கடந்து பீமனுக்களிகப்பட்ட நஞ்சே உன்னுள்ளும் நஞ்சென்றும் அனலென்றும் உருக்கொண்டது எனவுரைத்து பின் பெரும்புயலுக்கு தன்னை ஒப்பக்கொடுத்த சிறு சருகம் பேராற்றல் கொண்டெழுகிறது என்று உரைப்பதை பார்க்கையில் துரியனும் யுயுத்த்ஸூ போலவே அவரை அடையாளம் கண்டுவிட்டானோ என்று படுகிறது.

தங்கராஜ்