Thursday, July 12, 2018

உறவுகள்



அன்புள்ள ஜெ

பெரும்பாலான உறவுகளில் நான் பார்த்தது இது. ஒன்றின் பொருட்டு பிறிதொன்றை நாம் விடுவோம் என்றால் விட்டவற்றை அளவாகக்கொண்டு பெறுவனவற்றை மதிப்பிட்டுக்கொண்டே இருப்போம். ஏனென்றால் விட்ட விஷயங்கள் நினைக்க நினைக்க பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன பெண்கள் எதையும் ஓரு உறவுக்காக விட்டுவிடுவார்கள். ஆனால் சிலநாட்களிலேயே விட்டவைதான் பெரிதாகத்தெரியும். அதைச் சொல்லிச் சொல்லி இருக்கும் உறவையும் கசப்பானதாக ஆக்கிக்கொள்வார்கள்.


ஆனால் இன்னொரு வரியும் இதனுடன் இணைந்துகொள்கிறது . தன் வழியை தெரிவு செய்பவன் உறவுகளில் ஒரு பகுதியை துறக்காமல் முதலடியை எடுத்துவைக்க இயலாது. அதுவும் முக்கியமான வரிதான். இன்னொரு பக்கம் அது ஒரே விஷயத்தின் இரண்டு முகங்கள் என்று சொல்லலாம். விடாமல் எதையும் அடையவே முடியாது. இந்தக் கணக்கெடுப்பை நியாயமாகச் செய்யாமல் நல்லமுடிவுகளை எடுக்கமுடியாது


ஆர்.மோகன்