Tuesday, July 24, 2018

குலாடர்



ஜெ

குலாடகுடி உருவாகி வந்ததன் வரலாறும் அதற்கு இருக்கும் அரசியல் சிக்கல்களும் அதன் இரு இளவரசர்களும் போருக்கு எழும் சித்திரமும் பல எண்ணங்களை உருவாக்கின. வெண்முரசில் இவ்வாறு அரசுகள் எழுவது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பல அரசுகள் எழுந்து பெரிய நாடுகள் ஆக மாறின. சில நாடுகள் அப்படியே அழிந்தன. இந்த மாற்றம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த இளைஞர்களுக்குப் பாண்டவர்காளிடம் இருக்கும் அன்பு. அது வளர்ச்சியை நோக்கிய பெரிய பற்றுதான். மகாபாரதப்போர் பாண்டவர்களும் கௌவரர்களும் செய்த போர் மட்டும் அல்ல இப்படி ஏராளமான சிறிய அரசுகளும் அதன் வீரர்களும் அந்தப்போரில் அழிந்தார்கள். போர் நெருங்க  நெருங்க இத்தகைய அரசர்களின் எண்ணிக்கை கூடியபடியே வரும் என நினைக்கிறேன்

ராஜசேகர்