அன்புள்ள ஜெ
வெண்முரசி அத்தியாயங்களைக் காலையில் ஒருமுறை வாசிப்பேன். பிறகு மறுநாள் ஒருமுறை இன்னொரு முறை வாசிப்பேன். அப்போது புதிய வரிகள் கிடைக்கும்
நேற்று அப்படி வாசித்தபோது இந்த வரி கிடைத்தது பானுமதி எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். உடலை உணர்ந்ததுமே சிறு திடுக்கிடலுடன் அசலையின் விழிகளை சந்தித்தாள். இளமகள்போல் அவள் உள்ளம் சிறுநாணம் கொண்டது. முந்தையநாள் இரவு பானுமதி துரியோதனனிடம் நெடுநாட்களுக்குப்பின் உறவு கொண்டிருந்தாள். அதை இந்த ஒரே வரிதான் காட்டுகிறது. வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அழகான வரி
ஆனால் அவள் அசலையின் கணகளைச் சந்திக்கவே முடிவதில்லை. அவள் அக்கண்களைச் சந்திக்கும்பேதே நாணம் கொள்கிறாள்.ஏனென்றால் அசலை துச்சாதனுடன் உறவுகொள்ளவில்லை என அவளுக்குத்தெரியும்
சாரங்கன்