Wednesday, July 11, 2018

எதிர்த்து நின்று முக்தி பெறுவது



ஜெ

துரியோதனன் சொல்லும் இந்த வரிகள் அவன் அனைத்தையும் தெளிந்து தன் கடமை இது என்று எண்ணினவனாக அந்த நாடகத்தை ஆடுகிறான் என்று காட்டுகின்றன

இளைய யாதவரிடம் என் வணக்கத்தை தெரிவி. எதிர்நிலையில் நிற்பவனைப்போல் அவரை அறிந்தவர் எவரும் என்றுமிருந்ததில்லை என்று சொல்” 

என்ற வரி மிக ஆழமானது. பிரஹ்லாதனை விடவும் ஹிரண்யன் பெருமாளை அடுத்தறிந்தவன். ஏனென்றால் அவன் சதாகாலமும் பெருமாளை எண்ணிக்கொண்டிருந்தவன் என்று பௌராணிகர்கள் சொல்வதுண்டு. புராணங்களில் சத்ருக்கள் எல்லாமே இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள். எதிர்த்து நின்று முக்தி பெறுவது ஒருவழி. 

“யுதிஷ்டிரனிடமும் தம்பியரிடமும் நானும் என் தம்பியரும் கொண்டிருக்கும் அன்பை சொல். பிறிதொரு பிறவியில் ஷத்ரியர்கள் அல்லாமல் பிறந்து எளிய உள்ளத்துடன் இணைந்து வாழ்வோம் என்று கூறு.”

என்று துரியோதனன் சொல்லுமிடம் உணர்ச்சிகரமானது. அவர்களுக்கிடையே பிரச்சினையே அவர்கள் அரசகுடி பிறந்தவர்கள் என்பது தானே?

ஜெ