Wednesday, July 25, 2018

விதி



ஜெ

இந்த அத்தியாயங்கள் முழுக்க மனிதர்கள் வேறு ஏதோ சக்திகளால் தூக்கிச் சுழற்றப்படுகிறவர்கள் என்பதைத்தான் காட்டுகின்றன என நினைக்கிரேன். என் மனப்பதிவு அதைத்தான் காட்டுகின்றன. ஒருவரை ஒருவர் குளோஸாக கவனிக்கும் கதாபாத்திரங்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதன் வழியாக மனித மனங்களைச் சொல்க்றீர்கள். மனித மனங்களுக்கு அப்படி ஒரு சீரான வடிவமோ உருவமோ ஒன்றும் இல்லை. அவ்வப்போது அவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த மாற்றத்துக்கு ஒரே காரணம் வெளியே ஒரு விஷயம் நடக்கவிருக்கிறது என்பதுதானே ஒழிய அவர்களுடைய குணாதிசயம் எல்லாம் ஒன்றும் இல்லை. மனிதர்கள் அவர்களின் விதியால் ஆட்டுவிக்கப்படுவதையே பெரிய கிளாசிக் காவியங்கள் சொல்லும் என நினைக்கிறேன்

ஆர். அருணாச்சலம்