குடிகளுக்கென களம்நின்று குருதி சிந்துகையில் அரசன் தான் இழைத்த அனைத்து தீமைகளுக்கும் நிகர் செய்துவிடுகிறான் என்று நூல்கள் சொல்கின்றன” என்று பானுமதி துரியோதனனிடம் சொல்லும் இடம் நுட்பமானது. அதுதான் அவள் அவனுக்குள் இடைவெளியைக் கண்டடைந்து உள்ளே செல்லும் இடம். முதலில் இவனுக்கு நான் தேவையே இல்லை என உணர்ந்திருக்கிறாள். ஆகவே விலக்கம் கொள்கிறாள். ஆனால் பெண்ணாக அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள். கண்டுபிடித்ததும் அவள் ஓர் அன்னையாக ஆகிறாள். அவளுக்குத்தெரியும் அது பொய்யான ஆறுதல் என்று.ஆனால் அவன் நாடுவதும் அதையே என அறிந்திருக்கிறாள். அதை அவனுக்கு அளிக்கிறாள். அவன் அது பொய் என அறிந்தாலும் நிறைவடைகிறான். அவ்வளவுதான் அவள் தேடிய இடைவெளி கிடைத்துவிட்டது. அவள் காலடியை எடுத்துவைக்கிறாள்
சுவாமி