Monday, July 16, 2018

கலைடாஸ்கோப்



ஜெ

பானுமதி நிர்வாகம்செய்யும் அஸ்தினபுரியின் அரசியலின் நுட்பங்களை நான் ஒரு நிர்வாகி என்பதனால் வெகுவாக ரசித்தேன். நிர்வாகநூல்கள் எதிலாவது இதை நீங்கள் கண்டிருக்கலாம். வழக்கமாக பேசப்படும் மூன்றடுக்கை மேலும் கொஞ்சம் அடர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதை நிர்வாகத்தில் கலைடாஸ்கோப் என்பார்கள். ஒரு பிரச்சினையைத் தீர்த்தால் நாம் அந்தப்பிரச்சினையால் மறைக்கப்பட்டிருக்கும் அடுத்தப் பிரச்சினையை நோக்கிச் செல்கிறோம். அது இன்னும் பெருகும். இது இரண்டாம்நிலை. இப்படி கீழே சென்று சென்று பெருக்கிக்கொண்டே இருக்கிறோம். ஒருகட்டத்தில் கலைடாஸ்கோப் திரும்புவதற்கு ஒரு டிசைன் பிடிகிடைக்கிறது. அதல் ரூல்ஸ் களாகவும் பேட்டர்ன்களாகவும் மாற்றிக்கொண்டு ஸ்டேண்டிங் ஆர்டர்களை உருவாக்கினால் பிரச்சினை தீர்ந்துவிடும். அதன்பின் அது செல்ஃப் மேனேஜ்மெண்ட் படி செயல்படும். இந்த அமைப்பு எல்லா இடங்களிலும் செயல்படுகிறது

சுந்தர்ராஜன்