Tuesday, July 10, 2018

பங்காளிச்சண்டை


ஜெ

வெண்முரசில் வரும் மகாபாரதப்போர்களின் பின்னணி உணர்ச்சிகள் என்னென்ன என்று புரிந்துகொள்வதற்கான கீ இந்த அத்தியாயத்தில் இருந்தது. சாதாரணமாக நடக்கும் போரல்ல இது. சாதாரணப்போர்களாக இதைப்புரிந்துகொள்ள முடியாது.  பிறபோர்களில் எதிரி என்றால் எதிரிதான். தழுவி கண்ணீர் உகுத்தபின் வாளேந்துவதில்லைஎன்ற வரி அதைத்தான் கட்டுக்கிறது. உடன்பிறந்தவர்கள் போர் செய்யும்போது எங்கே அன்பு முடிகிறது எங்கே பகை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவர்களே அதை தெளிவுபடுத்திக்கொள்ளாமல்தான் முட்டிமோதிக்கொண்டிருப்பார்கள். நம்மூர் பங்காளிச்சண்டைகளிலேயே இந்த மனநிலை உண்டு. வருடம் முழுக்க சண்டைபோடுவார்கள். ஒரு சாவு என்றால் கட்டிக்கொண்டு அழவும் செய்வார்கள். மகாபராதப்போரின் பிரச்சினைகளும் சிக்கல்கலும் இதுதான்

ஆர்.நாகராஜ்