ஜெ
துரியோதனன் பற்களுடன் பிறந்தான் என்பார்கள். அதை பானுமதி முதலைக்குஞ்சு என்று
நினைக்கிறாள்.
முட்டை எனும்போது உள்ளிருந்து பறவை ஒன்றை ஈரமான மென்சிறகுடன் எதிர்பார்க்கும் வழக்கம் நெஞ்சுக்கும் விழிக்கும் இருந்தது. முட்டை உடைந்து செதில்கள் கொண்ட உடலும் நீண்ட வாலும் திறந்த வாய்க்குள் கூரிய பற்களுமாக முதலைக்குழவி வெளிப்படும்போது ஏற்படும் திடுக்கிடல்.
என்ற வரி அற்புதமான உருவகமாக இருந்தது. அதை சிலமுறை
வாசித்துக்கொண்டே இருந்தேன். முட்டையிலிருந்து முதலைக்குஞ்சு வெளிவரும் காட்சியை நான்
கண்டதில்லை. ஆனால் ஒரு படத்தில் டைனோசர் வெளியே வந்து ஓசையிடுவதை பார்த்தது ஞாபகம்
வருகிறது
மகேஷ்