Thursday, July 19, 2018

பிழை




ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால்? அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலாஎன்று பானுமதி நினைக்கிறாள். அவனுக்கு அப்படி எந்தப்பிழையும் இல்லை. ஆகவே அவனுக்கு எவருமே தேவையில்லை. அவர்கள் எவருமே அவனை அணுகமுடியாது. இவருக்கு பிறிதெவரும் தேவையில்லை. பெண் மட்டுமல்ல, ஆசிரியர்களோ தெய்வங்களோகூட. இந்த முழுதுடலில் நான் சென்றடைய பழுதேதுமில்லை. என அவள் நினைக்கிறாள். ஆனால் அத்தியாயத்தின் முடிவில் அந்த இடைவெளியை –பழுது என்பது இடைவெளி என அகராதியைப்பார்த்துத் தெரிந்துகொண்டேன் – கண்டுகொள்கிறாள். அவனை நோக்கிய அந்த முதல் காலடியை அவள் எடுத்து வைக்குமிடம் அழகான கவிதை


ராஜசேகர்