அன்புள்ள ஜெ
வெண்முரசு நாவல்களில் தொடர்ச்சியாக
நாடகச்சந்தர்ப்பங்கள் வந்துகொண்டே இருப்பது இந்நாவலில்தான் என்று தோன்றுகிறது. விகர்ணன்
குண்டாசி துச்சாதனன் துரியோதனன் காந்தாரி என வரிசையாக விடைபெறும் சந்தர்ப்பங்கள். அனைத்துமே
உணர்ச்சிகரமானவை. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவையும்கூட. விதுரர் பித்துப்பிடித்திருக்கிறார்.
காந்தாரி மிகத்தெளிவானவளாக இருக்கிறார். துச்சாதனன் எளிமையாக இருக்கிறான். விகர்ணன்
கொந்தளிக்கிறான் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையானவர்களாக இருக்கிறார்கள்
மகேஷ்