Wednesday, July 15, 2015

ஹைக்கூ வரிகள்

திரு ஜெ,

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவரிகளில், நடந்துகொண்டிருக்கும் 
ஏதாவது ஒரு செயலை ஜும் செய்து நம் கண்முன்னே கொண்டுவந்து நிற்கும்படி எழுதப்பட்டிருக்கும்.  
Inline image
Inline image


அதைத்தழுவி தமிழிலும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.  உதாரணத்திற்கு,

"வரப்பருகில் 
லாரி செல்ல
அதிர்கின்றன
நெற்கதிர்கள் !"

இப்போது அதிர்கின்ற கதிர்கள் நம் கண்முன்னே.  

"திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது."

அதுபோலவே தளிரிலைபோல படபடக்கும் கருடக்கொடி போல ஆயிரக்கணக்கான ஹைக்கூ கவிதைகளால் அணிசெய்து வருவதாகவே தங்கள் வர்ணனைகள் தோற்றமளிக்கின்றன.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு காட்சியை உற்றுப் பார்க்க நம் கண்களை, அப்பருப்பொருளுக்கு அருகே கொண்டு செல்கின்றன.  மிக அழகிய ஆடலுக்கு அனைவரின் கண்களையும் உட்படுத்துகின்றன.

கணபதி கண்ணன்