ஆசிரியருக்கு,
கிருஷ்ணன்.
இன்றைய பகுதி ஒரு விழி விருந்து. ராதை, ஜாம்பவதி , ருக்மணி, பாமை என ஒவ்வொருவரும் ஆண்டின் ஒவ்வொரு பருவத்திற்குரியவர்கள்.
ராதை உதிர்காலம், ஜாம்பவதி குளிர்காலம், பாமை வேனிற்காலம், ருக்மணியே வசந்தகாலம்.
இன்னொரு
நோக்கில் இந்த ஒவ்வொருவரும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்திற்கும் உரியவர்கள்.
ராதை பதின்மம், ஜாம்பவதி முன்னிளமை, பாமை இளமை, ருக்மணி பின்னிளமை.
கிருஷ்ணன் அணைத்து பருவங்களையும் உறையவைத்து ஒவ்வொரு பருவமாக ஒளிரும் ஒரு நீலக்கல்.