Monday, July 13, 2015

நீதியின் கண்கள்

ஆசிரியருக்கு ,

நீதி கருணையற்றது, வளைந்து கொடுக்காதது , மானுட உணர்வுளை மதியாதது , கிட்டத்தட்ட கணிதம் போன்றது . அதன் உக்கிர தர்க்கம் ஞானத்தின் எல்லையில் கொண்டுவிடும் , அதே சமயம் மானுடத்தின் எல்லையில் இருந்து வெளியேற்றும்.

இன்று இரக்கமற்ற விழிகளால் கிருஷ்ணன் இப்படுகளத்திற்கு ஆணை இடுவதும், அசைவின்றி நோக்குவதும் அதைத்தான். 

அதி சத்தியமான கருணையை ஒரு யோகியின் கண்ணிலேயே நாம் பார்க்க முடியும், அதேபோல அதி சாத்தியமான கருணையின்மையையும். கருணை இன்மைக்கு ஒரு சிரஞ்சீவி அறிவிக்கப் பட்டால் அது கிருஷ்ணனே. 

வலாற்றின் கண்களும்  நீதியின் கண்களே. 

கிருஷ்ணன்.