"ருக்மி
அவள் அருகே வந்து கனிந்து ஈரம் படர்ந்த குரலில் “தங்கையே, இதுநாள்வரை
உன்னை நான் பிறிதென எண்ணியதில்லை. சேதி நாட்டரசருக்கு உன் கையை
வாக்களிக்கையில்கூட உன் சொல் என் சொல்லென்றே எண்ணினேன். நீ இதுவரை கண்டிராத
எவர் பொருட்டோ என்னையும் உன் தந்தையையும் இவ்வரசையும் துறக்கிறாய். பித்து
கொண்டாயா? எங்ஙனம் பேதை என்றானாய்?” என்றான்."
காலங்காலமாய்,
பெண்மை தான் விரும்பிய ஆண்மையுடன் இரத்த உறவுகளைப் புறந்தள்ளி, வெளியேற
விழையும்போது, அக்குடும்பத்து ஆண்கள் படும், கடும் அகத்துன்பம் இது.
அழுகையை கைக்கொள்ளல் ஆண்மையின் இலக்கணமல்ல என்று நம்பும் ஆண்மனது தடுமாற,
கையறு நிலையில், ஆணிலிருந்து வேதனையின் உச்சத்தில் வெளிப்படும் சொற்களே
இவை.
கணபதி கண்ணன்