இன்றைய பதிவில் எவ்வளவு அழகு..
"பலராமர் அவரை நோக்கி ஓடிவந்த ஒருவனின் தலையை நீர்க்குமிழியென சிதறடித்தார்"
எனக்கு இது "கிள்ளிக் களைந்தானை" என்று திருப்பாவையில் வரும் சொல்லாடலை ஞாபகபடுத்தியது.
போலவே உவமை குவியல்களும்..
'யானையை அணுகும் நாய்களுக்குரிய உடலசைவு'
'நீர்ப்பறவைகள் மொய்த்துக்கொள்வதுபோல வெண்ணிற இறகுகள் கொண்ட அம்புகள் அவர்களைச் சூழ்ந்து வீழ்த்தின'
'களிமண் அணையை நொறுக்கும் காட்டுவெள்ளம்'
'படகுகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தபடி தூண்முறிந்த மாளிகைகள் போல'
யப்பா...
அதே நேரம் 'நற்காட்சி' இன்று 'படையாழி'-யாக கை, கழுத்து எதையும் வீசி எரிகிறது.
முன்பு ஏகலவ்யன் படைகளை கொல்ல வந்த தனி தனி சக்கரங்கள் போல இல்லை இதன் வர்ணனை
நேற்று விவரிக்கையில் கையில் ஒரு 'மென் தகடுகளின் அரைவட்ட கோர்ப்புகளோ' என்பது போல் நான் காட்சி படுத்தி கொண்டென்
அழகுகள் ஒரு புரம் இருக்க, அவன் காலில் விழாது பலராமன் சரண் புகுந்தோர் தலைகள் தெரித்தன
இனி பார்க்க வேண்டியது அக்ரூரர் எவ்வவண்ணம் சிரம் தப்புவார் என்பதையே.
இங்கும் ஹஸ்தினபுரி துணையில்லாமல் களம் புகவில்லை.
இப்படியான படை நகர்வே சியமன்தகத்திடம் தோற்காத சாத்யகியையும் த்ரிஷ்டதுயும்னனையும் சந்தேகித்து வரும் படை அல்ல இது என்பதற்க்கு போதுமானது.
ஆவலுடன் இன்று 12 மணிக்கான காத்திருப்பு .
நன்றி
வெ. ராகவ்