Thursday, July 16, 2015

இரு பயணங்கள்

அன்புள்ள ஜெ,

தங்கள் கனடா மற்றும் அமெரிக்க பயணம் மிக சிறப்பாக நடந்துவருவது குறித்து மிக மகிழ்ச்சி, இடைவிடாத பயணங்கள் சொற்பொழிவுகள் உரையாடல் மற்றும் சந்திப்புகள் சாதாரணமாக களைப்படைய வைப்பவை ஆனால், தங்களது உற்சாகம் நாங்கள் அறிந்தது தான். நீங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் உற்சாகத்தையும் சிந்திக்கும் ஆர்வத்தையும் உருவாக்கி வருவதை பதிவுகளின் வழியாகவும் புகைப்படங்கள் வழியாகவும் அறிந்து மிக மகிழ்ச்சி.


இந்த பயணங்களுக்கு இடையிலும், கங்கையில் கிருதவருமனைத் துரத்தும்  திருஷ்டத்யும்னன் பயணத்திலும், வாசகர்களாகிய நாங்கள் கூட வருகிறோம்.

நீங்கள் தொடர்சியான பயணத்தில் இருப்பவர் என்று தெரியும். இருந்தாலும் இப்போதைய நெடிய அமெரிக்க பயணத்துக்கு இடையே எழுதிவரும் வெண்முரசு படிப்பது ஆச்சரயமாக இருக்கிறது.  இருந்தாலும் புதிய இடங்களில் பயணத்தில்  இருக்கும்போது உங்கள் எழுத்துகளில் அந்த அனுபவம் ஏற்படுத்தும் பாதிப்பு ஏதாவது இருக்குமா என வியக்கிறேன். 


அன்புடன் 

சுரேஷ் பாபு