ஆசிரியருக்கு,
எனக்கு மிகவும் பிடித்த படிமம் எனது
இளவயது அனுபவம். அது நான் முதன் முதலில் என் ஊரில் உள்ள குளத்தில்
குத்தித்து, மேல் தளம் வெம்மையகவும் அடித்தளம் குளுமையாகவும் இருந்தது அது.
ஒரு வினோத அனுபவம், நண்பர்கள் அதனை பொருட்படுத்த வில்லை. நாளெல்லாம்
அதைப்பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன்.
இன்று
அந்த நாட்களை நினைவு படுத்தியது. உங்களின் இயற்கை அவதானிப்பு விவரனைகள்
எப்போதும் உள்ளத்தில் குளிர் நீர்க் கத்தியென இறங்குபவை. இன்றைய மலை , மழை
மற்றும் புழை வர்ணனைகள் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக கணுக் கணுவாக
ஆழத்திற்கு செல்லும்போது குளிர் ஏறுவது.
ஒரு நோக்கில் இது ஒரு யோக அனுபவம். மேலே வெம்மையும் அடியில் குளுமையும் இது ஒரு யோகப் படிமம்.
கிருஷ்ணன்