அன்புள்ள ஜெ,
இந்திர நீலம் 36 ஆம் அத்தியாயத்தின் இறுதியில்
திருஷ்டதுய்மனன் அக்ரூரரின் கண்களில் ஒரு கணம் வந்து போன ஒளி என்ன என்று
எண்ணுவதாக ஒரு வரிவருகிறது. அவனிடம் அம்மணியைப் பற்றிப் பேசி உளம்
காட்டியது கிருதவர்மன் தானே? அப்படியென்றால் அது கிருதவர்மன் என்னு தானே
இருக்க வேண்டும்! இல்லை அந்த ஆள்குழப்பம் திருஷ்டதுய்மனனின் மனக்குழப்பமா?
அவன் அக்கரூரருக்கும் அம்மணி மேல் விருப்பம் இருந்திருக்கும் என்று
எண்ணிக்கொண்டிருப்பவன் தானே!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
மகராஜன் அருணாச்சலம்
அன்புள்ள மகராஜன் அருணாச்சலம்
அக்ரூரரும்தான்.
முன்னால் வருகிறது அது
ஜெ