ஆசிரியருக்கு,
இன்றைய நாடகத் தருணம் ஒரு வாழ்வுச்சம்,
திரௌபதி சுயம்வரத்திற்கு வருவதும், குந்தி தம்மக்கள் வேண்ட பாகையை அணிந்து
நகர் வளம் வருவதற்கும் ஒப்பானது. வெண் முரசில் உள்ள நகருலா வரிசைகளை
மட்டுமே பட்டியலிட்டு ஒரு வாசிப்பு நிகழ்த்தலாம். அவமானமும் ஒரு உச்சமே,
அது மரணத்தை விட உயர்ந்தது.
ஒருவரின்
உயிருக்குள் சென்று இறுகி உறைந்து அது ஒரு நடத்தையாக வெளிப்படுவதும் ஒரு
வைரம் (சியாமன்தகம் ) தான். இது துருபதனுக்குள், சிகன்டிக்குள்,
அம்பைக்குள் இருக்கிறது, திருஷ்டத்தியும்னனுக்குள்ளும் இருக்கிறது, அது
துருபதன் வழி வந்தது. இப்போது அது கிருதவர்மனுக்குள்ளும். ஒரு நோக்கில்
பாமைக்குள்ளும் அதே தான் இருக்கிறது.
சியாமந்தகத்தின் குணம் துஞ்சாத குரோதம். கிருஷ்ணன் எளிதில் அதில் இருந்து தன்னை தொலைவு படுத்திக் கொண்டு விடுகிறான்.
கிருஷ்ணன்