Sunday, July 19, 2015

வஞ்சங்கள்


பெரும் வஞ்சங்கள் ஒரு நாளில் திடீரென்று முளைப்பவை அல்ல.அவற்றுக்கு கண்ணுக்குத் தெரியாத சிறிய  விதைகள் கூடப் போதும் என்பதும் அவை காலத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்தாலும் பெரும் வீச்சோடு மேலெழுந்து வரும் என்பதும். ஜெவின் படைப்புகளில் எப்போதும் காணப்படும் ஒன்று.அதே போல ஒருவரது விதி கண்ணுக்குத்  தெரியாமல் இன்னொருவரது விதியோடு பிணைக்கப்பட்டிருப்பதும்  வெகு நுட்பமாக சொல்லப்பட்டிருக்கும். இதை பத்மவியூகம் சிறுகதையிலிருந்து காணலாம். இங்கே சாத்யகி- பூரிசிரவஸ்,திருஷ்டத்யும்னன்- கிருதவர்மன், சாத்யகி-கிருதவர்மன், நட்பும் முரணும்  என்று பிற்காலங்களில் நடக்கப் போகும் விஷயங்களுக்கான  அடிப்படைகள் உருவாக்கபடுகின்றன. என் பார்வையில் சில loose ends இப்போதைக்குத் தெரிகின்றன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சுரேஷ் கோவை.