ஆசிரியருக்கு ,
கிருஷ்ணன்.
ஒரு குழந்தைக் கதையும் ,ஜாலக் கதையும்,
துப்பறியும் கதையும், நாட்டார் கதையும் சேர்ந்த ஒரு தத்துவ செவ்வியல் கதை
இந்த இந்திர நீலம்.
போர் முனையில் நிற்கும்
போது அது அமரமுனையாக இருப்பதும், சாத்யகியின் பொறுமை இன்மையும் காம்பில்ய
முற்றுகையில் துரியன் -கர்ணன் நிகழ்வை நினைவுறுத்துகிறது .
காத்திருக்கையில் எண்ணங்கள் கேள்விகள் ஆவதும் அது பெருகுவதும், தோற்றாலும்
களம் கண்டு புண் கொண்ட திருஷ்ட்டத்தியும்னின் அனுபவ அறிவும், அபாரம்.
காலையை
, மழையை, கடலை , துறையில் படகு அணைவதை விதம் விதமாக வெண் முரசு தோறும்
விவரிக்கப் பட்டுள்ளது, இத்தோடு கூட இந்த களம் காண்பதற்கு முந்தய முள்முனை
கணங்கள்.
சியமந்தகத்தின் ஆடல் ஈசனின் ஆடலுக்கு இணையானது, இணையற்றது.