ஜெ,
திருஷ்டாவும் சாத்யகியும் கங்கையில் புரியும் போர் 
வர்ணனை அபாரம். இத்தனை அக்குரோணி, அந்த வியூகம் என்பதெல்லாம் வெறும் 
கணக்குகளாக பின் நகர்கின்றன. வெறும் பத்திருபது பேரிடையே நிகழும் மாபெரும் 
போர். களத்தில் ஆடும் வீரன் ஒருவனின் உள்ளில் புகுந்து நாமே 
களம்புகுந்ததுபோல அத்தனை அருகில் எல்லாம் நிகழ்கின்றன.    அகமும் புறமும் 
என இருமையற்ற போர்.  போரே நாம் என ஆகும் உச்சம். 
சீனிவாசன்

