அன்புள்ள
ஜெ
ஜராசந்தனின்
கோமாளித்தனத்தைப் பார்த்தேன். எனக்கு உடனே கரமசோவ் சகோதரர்களின் அப்பா கரமசோவ் நினைவுக்கு
வந்தார்
அந்த
அம்சத்தை நான் பெரிய தொழிலதிபர்களிடமும் கண்டிருக்கிறேன். சாம்ராஜ்யங்களையே கட்டி எழுப்பியிருப்பார்கள்.
அவர்களின் டிராக் என்பதே ரத்தம் படிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கோமாளி என்றும்
தெரிவார்கள். எனக்குத்தெரிந்த ஒரு வட இந்தியத் தொழிலதிபர் பார்ட்டிகளில் சாக்ஸை கழட்டி
காதில் மாட்டிக்கொண்டு வெள்ளாடு மாதிரி சத்தம்போடுவார்
இது
ஏன் என்றே தெரியவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவர்கள் இதைக்கொண்டு தங்களை
சமப்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான். இந்தப்பக்கம் இந்த கோமாளித்தனம் இருந்தால்தான்
அந்தப்பக்கம் அப்படிக் கழுவேற்றவும் முடியும்
சாரங்கன்