ஜெ,
ஜராசந்தனின்
கதையிலுள்ள முக்கியமான அம்சம் பிருகத்ரதன் எப்படி ஜராசந்தனை ஏற்றுக்கொண்டார் என்பதுதான்.
கழுவேற்ற நிகழ்ச்சிக்கு தந்தையையும் தாயையும் அழைத்தேன் என்றே சொல்கிறான். ஏன் அவ்வாறு
நிகழ்ந்தது? பிருகத்ரதன் சமரசம் செய்துகொண்டிருக்கலாம். அவர் சத்ரியர். ஆகவே ஒரு முக்கியமான
சந்தர்ப்பத்தில் எது வசதியானதோ அந்த முடிவை அவர் எடுப்பார்.
ஆனால்
அதைவிடவும் முக்கியமானது என்று எனக்குத்தோன்றியது அவருக்கே ஜராசந்தன் அவருடைய மகன்
என்பதும் அவனே ஜெயிக்கப்போகிறான் என்பதும் நன்றாகத்தெரிந்திருக்கிறது என்பதுதான். ஆனாலும்
தன் மக்களைக்கொல்லும் இன்னொரு மகனை அப்பா ஏற்றுக்கொள்வது ஆச்சரியம். அது வரலாற்றிலும்
நிறைய நடந்துள்ளது என்பது அதைவிட ஆச்சரியம்
சண்முகம்