"“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!”" - சுகன் டு வியாசர் - முதற்கனல் 34. ஆக வெண்முரசு அதன் கதைப் போக்குகளின் கூடவே வியாச காவியம் வளர்வதைச் சொல்லத் துவங்கிவிட்டது. மேலும் சூதர் பாடல்களுக்காக ஏங்கும் அரசர்களின் சித்திரமும் முதற்கனல் தொட்டு வரத் துவங்கி விட்டது. ஆறெல்லாம் கடலுக்கு என்பதைப் போல சூதர் பாடலெல்லாம் காவியத்திற்கு என்பதை அறியாத அரசர் எவருளர்? பல்லாயிரம் பாடல்களில் பாடிக் கனிந்த ஒரு வரி தானே காவியத்தில் ஏறும்!
அருணாச்சலம் மகராஜன்