Saturday, April 9, 2016

நிழலும் குறிப்பும்




ஜெ,

விஸ்வகர்மனின் மகள்களை சூரியன் மணந்து அஸ்வினிதேவர்களைப் பெற்ற கதை சுருக்கமாக தேவிபாகவததில் வருகிறது. அந்தச்சொற்களிலிருந்து நீங்கள் கற்பனை விரித்துச் சென்ரிருக்கும் தூரம் மிகமிக அதிகம். பிரமிப்பூட்டுகிறது. ஆனால் செல்லக்கூடாது என்றும் இல்லை. ஒருமகள் குறிப்பு. சமிக்ஞை. இன்னொரு மகள் நிழல். சாயை. அவை இரண்டும் இணைந்ததே விஸ்வகர்மன் அளித்த உலகம் இல்லையா?

அப்பால் அப்பால் என்று மட்டுமே எப்போதும் அறியலாகும் ஒன்று அது. அதை அறிவதற்கான முதற்புள்ளியே நான்.” என்று சமிக்ஞை சொல்கிறாள்.“உருவென்று ஒன்று எழுந்ததுமே உடன் தோன்றும் நிழல் நான். உருவும் பிறிதொரு நிழலே என்றறிபவன் என்னை அறிகிறான்” என்று சாயை சொல்கிறாள்

நிழலைப்படைத்தபின்புதான் விஸ்வகர்மன் முப்பரிமாணத்தை உருவாக்கினான் என்பது அபாரமான கற்பனை

சுவாமி