Wednesday, April 27, 2016

காளியும் அன்னையும்

அழகாக வெட்டப்பட்ட புல்தரையை, செடிகொடிகள் மரங்களைப்பார்க்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது என்று நினைப்பது உண்டு. குறிப்பாக பனைமரத்தின் ஓலைகள் களையப்பட்டு தலையில் பச்சை கிரீடம் சூடியதுபோல் நிற்கும் பனைமரத்தை பார்க்கும்போது உடல்பயிற்சி கூடத்தில் இரு்நது எழுந்து வந்த இளைஞன்போல் வல்லமை காட்டிப்புன்னகைக்கிறது. .

இயற்கையை இயற்கையாகவே வைத்திருப்பது அழகா? இயற்கையை மனித எண்ணங்களுக்கு ஏற்ப வெட்டியும் நீட்டியும் வைத்திருப்பது அழகா? செயற்கையாக செவ்வதுதான் அழகுபோல் உள்ளது. ஆழ்ந்து பார்க்கும்போது இயற்கைதான் அழகு. இயற்கையின் சக்தியை வளைத்து வைக்கும் செயற்கையில் ஏது அழகு? செயற்கையின் அழகில் அழகு மட்டும் உள்ளது சக்தி இல்லை. இயற்கையின் அழகில் சக்தி உள்ளது அந்த சக்தியின் எல்லையை நம்மால் அளவிட முடியாததால் அதை அழகில்லை என்ற அச்சத்தில் அறுவெறுக்கின்றோம். பெண்ணும் இயற்கையின் சக்தியில் நிற்கையில் எல்லைக்கடந்தவளாக தெரிகிறாள் அச்சத்தை ஏற்படுத்துகின்றாள். நெறியில் வைத்து அவளுக்கு ஒரு செயற்கை அழகை தருகின்றோம். நம் கண்ணாடியின் அளவுக்கு மரத்தை வெட்டி வைத்துவிடுகின்றோம். 

// முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசிதோள்நிமிர்வென்பது ஆண்மைதோள்வளைதலே பெண்மை” என்று ெவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும்கை குழையும்விழிகள் சரியும்குரல் தழையும்நகைப்பு மென்மையாகும்ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும்ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும்நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசி முலைதழைய நின்றிருப்பீர்கள்மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும்அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள்அதுவே பேரின்பம் என்பது.” ஒவ்வொரு நாளும் அவர்களின் தோள்களைப்பற்றி “சற்று தளர்வாகற்று குழைவாகவீரன் நாணேற்றிய வில் என” என்று சொல்லிச்சொல்லி வளையச்செய்தனர். “காற்றில் ஆடும் கொடிபோலகனி ொண்ட செடிபோலவேள்விப்புகைபோல என்று காட்டி பயிற்றுவித்தனர்.//





இயற்கையை வெட்டி நீட்டி செயற்கை அழகில் வைப்பதுபோல்தான் பெண்ணை தெய்வமாக்குவதாக கல்லாக்கிக்கொண்டு இருக்கிறது உலகம். கல்லில் கனத்து கனத்து அவர்கள் கூன்விழுந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள். நெறி என்பதே ஒரு வாள் அது இயற்கையை வெட்டி வெட்டி பார்வைக்கு ஒரு அழகை உண்டாக்கி அதன் நிமிர்மை சக்தியை அழித்துவிடுகிறது.

//பெண் எனும் தெய்வத்தை பொற்பென்றும் பொறையென்றும் குலமென்றும் நெறியென்றும் அணியென்றும் ஆடையென்றும் ஆறுவகை மந்திரங்களால் கட்டி பீடத்தில் அமரச்செய்திருக்கிறோம்//



நிர்வாணமாக வந்த பிரமதத்தன் தனது நூறு மனைவிகளுடன் ஹிரண்யவனம் காட்டில் நுழைந்து அவர்களுக்கும் நிர்வாணம் அளிக்கிறான். அந்த வனத்திற்கு கன்யாவனம் என்ற பெயர் உருவாகிறது. அந்த வனத்திற்கு நைஷ்டிகர் அன்றி பிறர் செல்லக்கூடாது என்ற நெறி வந்ததுதான் அழகு.

இயற்கையின் சக்தியெனும்  அழகை அறியாமலே நெறி இயற்கையை வெட்டி வெட்டி ஒரு அழகை உண்டாக்குகிறது. சக்தியே ஒரு அழகுதான் அவள் தில்லைக்காளி. அவளை சங்கிலிப்போட்டு கட்டிவைத்துவிட்டு. அவளுக்கே அணிமணிகள் புனைந்து பொற்சபையில் புன்னைக்க நிற்க வைத்தோம் சிவகாமியாக.

தில்லைசிவகாமி உதடுபிரியாமல் புன்னகைக்கிறாள்.  தில்லைக்காளி பல்தெறிய சிறிக்கிறாள். அவளுக்கு வீடு. இவளுக்கு காடு. 

ராமராஜன் மாணிக்கவேல்