dear J,
Was expecting Sahasrakavacha it in Veyyon... I thought he probably doesn't fit in your grand plan. Nice to see that legend as well.
Jarasandha's
back-story - is it part of any purana or even Vyasa Mahabharatha? I
have heard of Jarasandha being brought up by tribal who handed the
supposedly dead child to the king. but not this version...
Is Sahasrakavacha mentioned in Vyasa Mahabharatha itself? Or is this story from a variant?
RV
அன்புள்ள ஆர்வி,
ஜராசந்தன் கதை மட்டும் அல்ல அனேகமாக ‘அத்தனை’ கதைகளுமே வெண்முரசில் புதியதாகச் சொல்லப்பட்டுள்ளன.மூலமகாபாரதங்களில் அறிமுகமுள்ளவர்களுக்கு இது தெரியும். மூலத்தை அறியாமல் கதைகளை மட்டுமே அறிந்திருக்கும் நிலையில்தான் இந்த விரிவாக்கமேகூட மூலத்தில் இருக்கும் என்னும் மனநிலை உருவாகிறது.
ஆகவே அது மூலத்தில் இருந்து எடுத்து எழுதப்பட்டது என்று தோன்றுகிறது. அங்குள்ள கற்பனையை ரசிக்க முடிவதில்லை. மூலமே தெரியாமல் இது ஒரு மகாபாரத அடிப்படைகொண்ட நாவல் என்று வாசித்தால் வேறுவழியில் இக்கற்பனைக்குள் செல்லமுடியும்
ஆனால் வெண்முரசில் இந்த விரிவாக்க்கத்திற்கான அடிப்படைகள் சில உள்ளன. ஒன்று, அப்படி விரிவாக்கத்துக்கான முகாந்திரம் மூலத்தில் இருக்கவேண்டும். உதாரணமாக விஸ்வகர்மனின் மகள்களின் பெயர்கள் சம்க்ஞை , சாயை என இருக்கிறது. அதற்குமேல் கதை இல்லை மூலத்தில். -- தேவிபாகவதம் அது. ஆனால் குறியீடு, நிழல் என அச்சொற்களுக்குப் பொருள். ஆகவே அவற்றை கற்பனையில் வளர்க்க இடமிருக்கிறது.
இரண்டு மூலத்தின் கதாபாத்திரக் கட்டமைப்பு, அக ஒழுங்கு சிதையக்கூடாது. ஜராசந்தன் ஓர் அசுரகுணமுள்ள அரசன். இரட்டைத்தன்மை கொண்டவன். இவ்வம்சங்களை மீறமுடியாது. ஆனால் அவனுடைய கதாபாத்திரமே ஜெங்கிஸ்கான் முதல் ஹிட்லர் வரையிலான ஒரு சரடின் உருவகமாக ஆவது மறுஆக்கம்
சகஸ்ரகவசன் கதை மகாபாரதத்தில் இல்லை. அது தென்னிந்தியாவின் புராணங்களில் மட்டுமே உள்ளது. கேரளப்புராணங்கள் [நாராயணீயம்] அதைக்குறிப்பிடுகின்றன.. அது ஏன் வெய்யோனில் வரவில்லை என்றால் வெய்யோனின் மனநிலை அது அல்ல. அது வேறு உணர்வுநிலைகளில் செல்கிறது. அதில் தந்தை- மகன்- பிள்ளைகள் போன்றவை, நெகிழ்வான தருணங்கள், கொந்தளிப்பே இல்லாத சர்வசாதாரணமான அன்றாட நிகழ்வுகள்தான் மையமாக உள்ளன
ஜெ