ஜெ
இன்றைய
வெண்முரசின் அபாரமான பெண்ணுடல்
வர்ணனைகள் எங்கே உச்சக் கொள்கின்றன என்று பார்த்தேன். அன்னை, அதன்பின் செவிலி, அதன்பின்
களித்தோழி, அதன்பின் கன்னியரான காதலிகள், அதன்பின் துணைவிகள், அவர்களின் முதுமை, மகளின்
தோற்றம் எனச்செல்லும் சித்தரிப்பில் ஒரு மனிதனின் காமம் தோன்றிமுதிர்வடைவதன் காட்சி
உள்ளது.
முழுக்கமுழுக்க
உள்ளே நிகழ்வது. பெண்களை இப்படித்தான் துளித்துளி அனுபவமாகத் திரட்டிவைத்திருக்கிறோம்.
எல்லாருக்குள்ளும் இப்படி ஒரு கலைடாஸ்கோப் சித்திரம் இருக்கும். பல்லாயிரம் சின்னச்சின்ன
உடல்காட்சிகள் .நிகழ்ச்சிகளின் துளிகள். விஸ்வாமித்திரருக்கு நேரில்பார்த்ததுதான் இருக்கும்.
நமக்கு சினிமாவும் சேர்த்தி. அந்தக்குளம் கலங்கி வருகிறது இதில். அது பெண்ணுடல் அல்ல
உடல்
உடலென்று காட்டி உடலில்லை உடலில்லை என்று அலைத்து உடல்மட்டும் அளித்து ஒளிந்தும் காட்டியும் ஆடுதலே அது. நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம்.
என்னும் இரு வரிகளில் அந்த பெண்ணனுபவம்
ஒரே அனுபவமாகத் தொகுக்கப்பட்டுள்ளது
சாமிநாதன்