அன்புள்ள
ஜெமோ,
ஜராசந்தனின்
எழுச்சி மூலக்கதையில் உள்ள சுருக்கமான கதையை அப்படியே ஒட்டியிருக்கிறது. ஆனால் அதிலுள்ள
குறியீடு வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு மேலே மெலே சென்றுகொண்டிருக்கிறது.
பல விஷயங்களைக் கவனித்தேன். கண்டபடி ஆபரணங்களை அணிந்துவந்த மலைமகனாகிய ஜராசந்தனைத்தான்
மக்கள் ஆதரித்தனர். ஆனால் கழுவேற்றுநிகழ்ச்சிக்கு அவன் அரச உடையில் ஆடம்பரமாக வருகிறான்.
அதேபோல
அவனுடைய கல்வி. கல்வி இல்லாதவன் என்றுதான் அவன் ஆரம்பத்தில் மக்களால் ஆதரிக்கப்பட்டான்.
ஆனால் கடைசியில் அவன் மிகப்பெரிய கல்வியை அடைந்தவனாக ஆகிவிடுகிறான். அவனுடைய கல்வி
அவனை மேலும் குரூரமானவனாகவே ஆக்குகிறது. கல்வியை அதிகாரமாகவே அவன் கற்றுக்கொண்டான்
கல்வியையும்
கோமாளித்தனத்தையும் இரண்டு கைகளாக வைத்திருக்கிறான். இங்குள்ள பெரிய ஆட்சியாளர்கள்
எல்லாருமே இப்படித்தான் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
ஸ்ரீதர்