Tuesday, April 12, 2016

ஜராசந்தர்கள்






அன்புள்ள ஜெ

Every revolution creates a Bonaparte என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. உலகவரலாறு முழுக்கவே தென்படும் ஓர் உண்மை இது. நெப்போலியன், ஸ்டாலின் , ஹிட்லர்,,மாவோ,போல்பாட் ஏன் பிரபாகரனேகூட அப்படித்தான். இவர்கள் எல்லாம் மக்களிடமிருந்து உருவாகி வந்தவர்கல். மக்களின் தலைவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகார வெறிபிடித்து மக்களை மேலும் அதிகமாக அழித்தார்கள். ஆனாலும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

இவர்கள் உருவாகி வந்த விதம் எல்லாமே ஒன்றுதான். ஒரு கட்டத்தில் மக்களுக்கு தாளமுடியாத ஒரு கொலைவெறி வருகிறது. அந்தக்கொலைவெறிக்கான ஆயுதம் இவர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்கிறார்கள். கொலைவெறி மக்களை நோக்கித்திரும்புகிறது. அழிவுச்சக்தி ஆகிறது

ஜராசந்தன் ஒர் அருமையான கதாபாத்திர வடிவமைப்பு.

சண்முகம்