ஜெ
பெரிய அழிவுகளை தெய்வங்கள் விரும்புகின்றன என்று ஒரு சொல் உண்டு. அது உண்மை. தௌம்யருக்கும் தெரிந்துவிட்டது என்ன நடக்கும் என்று. ஆனால் அவராலும் ஒன்றும் சொல்லமுடியாது. அவரும் அந்த ஆழத்திற்குள் கூட்டமாகச் சென்றுவிழுந்தாகவேண்டும்
ஏனென்றால் அது அன்னையின் ஆசி. ஆரம்பம் முதலே இருவரின் ஆடல் இது என்றே வந்துகொண்டிருக்கிறது. ஒருவர் கண்ணன். இன்னொருவர் திரௌபதி. திரௌபதி இங்கே பராசக்தி. இந்நாவலில்தான் அவள் முழுமையாக அவ்வாறு வெளிப்படுகிறாள்
சாரங்கன்