ஜெ
மிக இயல்பாக ராஜசூயவேள்வி நோக்கி கதை செல்கிறது. வெய்யோனில் ராஜசூய வேள்வியின் பகுதி நகர்கோள்விழாவாக ஆக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே ராஜசூயவேள்வி மேலும் பெரிதாக வரவிருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டேன்
ராஜசூயவேள்வி என்பது ஒரு பேரரசன் பிற அரசர்கள் மேல் முழுமையான அதிகாரத்தைப்பெறுவதற்காக நிகழ்த்துவது. அதன் முக்கியமான சடங்கே ஆநிரைகவர்தல்தான். ஆகவேதான் அதை இந்திரப்பிரஸ்தம் வணிகநகராக நிலைகொண்டபின்னர் அமைப்பீர்கள் என நினைத்தேன்.
ராஜசூயவேள்விக்கான மனநிலைகள் நுணுக்கமாக அமைகின்றன. மேலும் மேலும் இலக்குகளை அடைந்தபடியே செல்வதைப்பற்றியும் இலக்குகளே இல்லாத நிலையின் முழுமைபற்றியும் ஆரம்பிக்கும் பேச்சு அப்படியே ராஜசூயம் வரை வந்து நிற்கிறது
அந்த அத்தியாயத்தின் முழுமை அழகானது
சுவாமி