எவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. --
என்ற வரிகளை பலமுறை திரும்ப வாசித்தேன். அஸ்தினபுரியில் இப்போதுதான் கூட்டம் அதிகம். மக்கள் நெரிகிறார்கல். ஆனால் அத்தனைபேரும் தனியாக் ஆகிவிட்டனர். ஒருவரை ஒருவர் நோக்கிக் கூச்சலிடும் அளவுக்கு தூரமாகவும் இருக்கிறார்கள்.
போரின் முந்தையச் சூழலைப்பற்றிய நுட்பமான உளவியல்பதிவு இது. இனி போர்க்களத்தில் அவர்களின் உடல்களும் உள்ளங்களும் ஒன்றாகும். ஆனால் தனித்தனியாக தனிமையில்தான் அவர்கள் சாவார்கள்.
அப்படி அவர்கள் பெருங்கூட்டமாகவும் தனியாகவும் ஆனது அந்த சீருடையால்தானோ என்ரு தோன்றுகிறது. ஒரே நிறம் அவர்களை கூட்டமானவர்களாக்வும் பர்சனாலிட்டி இல்லாதவர்களாகவும் ஆக்கிவிட்டதா என்ன?
சத்யமூர்த்தி