Tuesday, July 3, 2018

அரசும் குடிகளும்



வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27 


ஜெ


படைகள் வெளியே கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன. உள்ளே அரச சபை கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் வேறு ஒருவகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இரு அத்தியாயங்களையும் ஒப்பிட்டுவாசிக்கையில் வரும் சித்திரம் ஆச்சரியமானது. வெளியே ஒரு பெரிய அர்த்தமில்லாத கொந்தளிப்பு. அனைவரும் வெறிகொண்டிருக்கிறார்கள். உள்ளே அந்த சபையை அமைப்பதில் என்னென்ன நிலைவேறுபாடுகள். எவ்வளவு கணக்குகள். யாரெல்லாம் மேலே யாரெல்லாம் கீழே என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள். அதிலமர்ந்து சலன் செய்யும் விமர்சனம் வழியாக மெல்லிய விமர்சனத்துடனும் ஏளனத்துடன் அந்தச்சபை அறிமுகமாகிறது. அதுதான் படைகளை ஆள்கிறது. வெளியே மக்கள். உள்ளே கவர்மெண்ட். இரண்டு அமைப்பையும் காட்டுகிறது 26, 27 ஆம் த்தியாயங்கள்

ஸ்ரீனிவாசன்