Monday, July 9, 2018

வஞ்சம்




அன்பு ஜெ


குண்டாசி- யுயுத்சு உரையாடல் சீண்டிக்கொண்டே செல்கிறது. 

<விழியிழந்தோருக்கு ஒளியுலகின் மேலுள்ள அணையாத வஞ்சத்தால் ஆனவர் அவர்>

அப்படியென்றால் நாமெல்லாம் எதன் மீதுள்ள வஞ்சத்தினால் ஆனவர்கள் ? காந்தி மீதுள்ள வஞ்சம் முதல் குரோதவசையின் வஞ்சம் வரை அதற்கு பல முகங்கள் என்று தோன்றுகிறது.

யுயுத்சு 'மொழியென்று சூழ்ந்திருக்கும் விராடவடிவத்தை'  ரொம்பவே நம்புகிறானோ ? நிஜமாகவே அது மனிதரை, அவர்களின் விருப்புவெறுப்புகளை தாண்டி அவ்வளவு பெரியதா ??

மதுசூதனன் சம்பத்